Total Pageviews

Saturday, May 2, 2015

உலக அழுகி !


நோயாளி :  டாக்டர், ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..."

டாக்டர்.. என்ன சார், உடம்புக்கு என்ன செய்யுது?"

நோயாளி : ஒண்ணுமில்லை டாக்டர்,  "நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது...!" ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..."

**************************

நோயாளி : நர்ஸ், இந்த ஆஸ்பத்திரியில எதுக்கு  மேடம், ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்... வெச்சிருக்காக ?

நர்ஸ் : இங்கே வந்திட்டிங்கள, ஆறுலேயும் சாகலாம்.. அல்லது நூறுலேயும் சாகலாம் ! அதான் !.

நோயாளி : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!


**************************

டாக்டர்.....(தன்னிடம் வந்த நோயாளியைப் பார்த்து)....... நீங்கள் என்னிடம் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு என்ன  வியாதி என கூற முடியும்.

நோயாளி.........."ஆமா டாக்டர்,  நான் ரொம்ப நாளா உங்க நர்ஸ் கமலாவைக் காதலிக்கிறேன்."

டாக்ட ர்.............?????????????????????

*************************

உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட ஒரு பொண்ணு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம் !.

ஐயையோ... அப்புறம்...?

உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்க !

********************

மனைவி: சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம் !

கண்வன் : டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?

மனைவி : டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்!

கணவன்: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

****************************
மனைவி: "ஏன் இப்படி பேய அடிச்ச மாதிரி இருக்கீங்க?"

கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  நீ தானே ஓங்கி முதுகிலே அடிச்சே!" அதான் !

 மனைவி: !!!!!!!!!!!!!!

********************************

2 comments:

  1. அனைத்தும் ஸூப்பர் அடி
    தமிழ் மணம் 1

    ReplyDelete

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...