கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு !
நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு !
*******************************
தலைமை ஆசிரியர்: சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கணக்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்!
தந்தை : அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?
தலைமை ஆசிரியர்: 10,000/- ரூபாய் டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும் !
*******************************
காதலி :அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!
காதலன் : உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!
காதலி ஏன்?
காதலன் : உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!
ஆனால்............ இன்றைக்கு கல்யாணமாகி குழந்தையுடன் ........
*******************************
மனைவி – என்னங்க.. இன்று திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க..! நான் அப்படியே கீழ விழுந்துட்டேன் !.
கணவன் – நல்லா யோசிச்சுப் பாரு…! பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா ! இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
***************************
திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு...
இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனது இருந்து என் வீட்டுக்காரி கிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன்!தரமாட்டிங்கறலே!
******************************
ஹா... ஹா... வீட்டுக்குள்ளேயே திருடன்...!
ReplyDelete