ராமு : உன் காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏண்டா வருத்தமா இருக்கே..?
சோமு : நாலு பேர் கைமாறி போட்டு வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
*********************************
சார், உங்க கடைய இன்னும் எப்படி ஆக்ரமிப்புல இடிச்சு காலி பண்ணாம இருக்காங்க??
என்னய்யா சொல்றே??
ஆமாங்க.. நீங்கதானே சொன்னீங்க.. திருச்சி மெயின்ரோடுல கடை வச்சிருக்கேன்னு...
*************************************
காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !
காதலன் : லட்டு, ஜிலேபி, ஜாங்கிரி, பூந்தி ............... !
*************************************
காதலி : எக்ஸாம் டைம்'ல எங்க வீட்டில, நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்... !
காதலன் : பூ, இவ்வளவு தானா? எங்க வீட்டில, நாங்க புத்தகத்தையே தொட மாட்டோம்ல்ல!
*************************
ராமு : வாங்க, சோமு வாங்க!
சோமு: உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!
ராமு : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தாயே!
சோமு : சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
**********************
No comments:
Post a Comment